போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது நாமே – ஒப்புக் கொண்டது இஸ்ரேல்!

Wednesday, July 25th, 2018

தனது வான் எல்லையில் நுழைந்த சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தரையில் இருந்து வான் நோக்கி செல்லும் இரண்டு ஏவுகணைகளை சிரியாவின் சுகோய் ரக போர் விமானங்களை நோக்கி செலுத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
இந்த சம்பவம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸில் நிகழ்ந்ததாக இஸ்ரேலில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிரியாவின் போர் விமானத்தை இயக்கிய விமானியின் நிலை குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது.

Related posts: