போர் பயிற்சியை மீண்டும் நடத்த அவசியம் ஏற்படவில்லை – டிரம்ப்!

Saturday, September 1st, 2018

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் தனக்கு நல்ல உறவு உள்ளதாகவும், தென் கொரியாவுடன் போர் பயிற்சியை மீண்டும் நடத்துவதற்கு அவசியம் ஏற்படவில்லை என்றும் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, வடகொரியாவுக்கு இந்த வாரம் மேற்கொள்ள இருந்த பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் திடீரென இரத்து செய்தார்.

சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அளித்த வாக்குறுதிப்படி, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பான வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை என்பதால்தான், மைக் பாம்பியோ பயணத்தை டிரம்ப் இரத்து செய்தார் என தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் தனக்கு நல்ல உறவு உள்ளதாகவும், தென் கொரியாவுடன் போர் பயிற்சியை மீண்டும் நடத்துவதற்கு அவசியம் ஏற்படவில்லை என்றும் டிரம்ப் டுவிட்டரில் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் வட கொரிய விவகாரத்தில் சீனாவை டிரம்ப் சாடி உள்ளார்.

இது பற்றி அவர் டுவிட்டரில் குறிப்பிடுகையில், “வடகொரியாவுக்கு சீனா மிகுந்த அழுத்தம் அளித்து வருகிறது என்று நம்புகிறேன். மேலும் பீஜிங், வடகொரியாவுக்கு எரிபொருள், உரம், பலசரக்குகள் வழங்கி வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

Related posts: