போர் பதற்றத்திற்கு மத்தியில் பாக் கிறிக்கெற் விரரின் முக்கிய வேண்டுகோள்!

Thursday, February 28th, 2019

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அயல் நாடுகளுக்கு மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படக் கூடாது என என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தானை தங்கள் எதிரி நாடாக நினைக்க வேண்டாம் என நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

உங்கள் எதிரி எங்களுக்கும் எதிரி. நாங்கள் இரண்டு தரப்பும் ஒரு போராட்டத்திலேயே ஈடுபடுகின்றோம் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக எவ்வளவு இரத்தம் சிந்த வேண்டும்?

தீவிரவாதிகளுக்கு எதிரான போரை வெற்றி கொள்வதற்கு இரண்டு தரப்பும் ஒன்றிணைய வேண்டும் என வசிம் அக்ரம் கோரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

Related posts: