போருக்கு தயாராகும் ஜப்பான்!

Sunday, August 20th, 2017

அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்ட குவாம் தீவின் அருகில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படும்  நிலையில் ஜப்பானின் மேற்கு கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சியில் சுமார் 150 பேர் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏவுகணைத் தாக்குதல்களின்போது, மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு வெளியேறும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை கடந்த ஜுலை மாதம் வடகொரியா பரிசோதித்திருந்தது.

இந்த பரிசோதனையை தொடர்ந்து, அந்த நாட்டின் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்ட பசுபிக் பிராந்தியமான குவாம் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் ஜப்பான் பரப்பினுடாக மேற்கொள்ளப்படும் என்று வடகொரியா எச்சரித்திருந்தது.இதைத்தொடர்ந்தே ஜப்பான் மக்களுக்கு குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது

Related posts: