போரால் பாதிக்கப்பட்டோருக்கு நோபல் பரிசை அர்ப்பணித்தார் சான்டோஸ்!

Sunday, December 11th, 2016

ஓஸ்லோவில் நடைபெற்ற நிகழ்வில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள கொலம்பிய அதிபர் ஹூவான் மனுவெல் சான்டோஸ் ஃபராக் கிளர்ச்சியாளர்களோடு 52 ஆண்டுகள் நிகழ்ந்த மோதல்களின்போது கொல்லப்பட்டோருக்கு அந்த நோபல் பரிசை அவர் அர்ப்பணித்துள்ளார்.

மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தொடக்க ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்ட பிறகு, இறுதி அமைதி உடன்படிக்கையை உருவாக்க இந்த நோபல் பரிசு உதவியிருப்பதாக சான்டோஸ் தெரிவித்திருக்கிறார்.

கொலம்பியாவின் இந்த அனுபவம், சிரியா முதல் தென் சூடான் வரையான மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நம்பிக்கை ஒளியை வழங்கியிருக்கிறது என்று அவர் கூறினார்.

வன்முறையற்ற மாற்று வழிகள் இருக்கின்றபோது, ஆயுத பலத்தால் வெற்றி காண்பது என்பது மனித உணர்வின் தோல்வியை காட்டுகிறது என்று சான்டோஸ் குறிப்பிட்டார்.பாப் டிலெனின் போருக்கு எதிரான ஒரு பாடல் வரிகளையும் அவர் மேற்கோள் காட்டி பேசினார்.

இலக்கியத்திற்கு நோபல் பரிசு வென்ற பாப் டிலென் அப்பரிசை பெற வரப்போவதில்லை . நோபல் பரிசு பெற்ற பலரும் பின்னர் ஸ்டோக்ஹோமில் தங்களுடைய பரிசுகளை பெற்றுகொண்டனர்.

_92917868_12e34e52-db75-45d1-bc83-7491387db5b9