போராட்டங்களை கட்டுப்படுத்த பிரான்ஸில் கடுமையான சட்டத்திருத்தம்!

Wednesday, January 9th, 2019

அரச எதிர்ப்பு போராட்டங்களைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் கடுமையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது.

அந்த நாட்டின் பிரதமர் எடோர்ட் ஃபிலிப்பே இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான சட்ட வரைவு விரைவில் வெளிப்படுத்தப்படும்.

போராட்டங்களில் குழப்பவாதிகளை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

அந்தநாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து 7 வாரங்கள் போராட்டம் நடத்தப்படுகின்றது.

இந்த போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளால் இதுவரையில் 7 பேர் மரணித்ததுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சென்னை கல்லூரியில் ஆயுதங்களுடன் மாணவர்கள்!
மாரடைப்பு வருவதை அறியும் மருந்து கண்டுபிடிப்பு: பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை!
எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை!
வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு : பாகிஸ்தானில் 31 பேர் பலி!
இராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது அபிநந்தனுக்கு!