போராட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – சூடானில் 30 பேர் உயிரிழப்பு!

Tuesday, June 4th, 2019

சூடான் நாட்டில் சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு மேற்கொண்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போராட்டக் குழுவினருக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், கர்த்தூமில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு வெளியிலும் போராட்டம் வெடித்தது. இந்த தர்ணா போராட்டம் சுமார் ஒரு வார காலம் நீடித்த நிலையில், இன்று இராணுவம் போராட்டக்காரர்களை ஒடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், குழந்தை உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

போராட்டக்காரர்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

Related posts: