போப் பிரான்சிஸ்ஸின் ஈராக்கிற்கான வரலாற்று விஜயம்!

Friday, March 5th, 2021

போப் பிரான்சிஸ் ஈராக்கிற்கு ஒரு வரலாற்று விஜயத்தை முன்னெடுக்கவுள்ளார். கொவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து போப் மேற்கொள்ளும் முதலாவது சர்வதேச பயணமும் இதுவாகும்.
நான்கு நாள் பயணம் ஈராக்கின் குறைந்து வரும் கிறிஸ்தவ சமூகத்திற்கு உறுதியளிப்பதற்கும் மதங்களுக்கு இடையிலான உரையாடலை வளர்ப்பதனையும் நோக்காக கொண்டது.
கடந்த 20 ஆண்டுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் தப்பி ஓடிய ஈராக்கிற்கு ஒரு போப்பாண்டவர் மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும்.
ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்களை முதலில் அல்கொய்தாவின் கைகளிலும், பின்னர் ஐ.எஸ்.ஐ.எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்) கைகளிலும் முறையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பல்லாயிரக் கணக்கானவர்களை புலம்பெயரவும் வழிவகுத்ததுடன், ஈராக்கில் கிறிஸ்தவ சமூகத்தின் சமூகத்தின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகியுள்ளது. இந் நிலையில் போப்பின் இந்த விஜயத்தில் நினிவே சமவெளியில் ஈராக்கின் மிகப்பெரிய கிறிஸ்தவ நகரமான பாக்தாத், மொசூல் மற்றும் கராக்கோஷ் ஆகிய பகுதி வாழ் மக்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: