போப் ஆண்டவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம்!
Tuesday, February 5th, 2019கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகம் வத்திக்கானின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமீரகத்தில் 2019ஆம் ஆண்டு சகிப்புத் தன்மைக்கான ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிற நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் கலந்து கொள்ளவே போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட போப் ஆண்டவர் ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் “மதங்களுக்கு இடையிலான உறவின் வரலாற்றில், ஒரு புதிய பக்கத்தில் உங்களின் நேசமிக்க தேசத்தில் எழுதுகிறேன். நாம் வேறுவேறாக இருந்தாலும் சகோதரர்கள்தான்” என தெரிவித்தார்.
Related posts:
மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக பெண் நியமனம்!
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!
நாட்டில் மதுபான பாவனை குறைவடைந்தது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்!
|
|