போதையில் விமானத்தை செலுத்த முயன்ற விமானி கைது!

Tuesday, January 3rd, 2017

கனடாவில் விமானத்தின் விமானி அறையில் மது அறுந்திய விமானி ஒருவர் விமானம் புறப்படுவதற்கு சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதான விமானியின் உடலில் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் மூன்று மடங்கு அதிகமான மது இருப்பது அவர் கைது செய்யப்பட்டு இரண்டு மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்டது.

அவர் செலுத்தவிருந்த விமானத்தில் 100க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். அந்த விமானம் வேறு விமானியுடன் கலகரியில் இருந்து மெக்சிகோவின் கன்குன் நகரை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

விமானப் பணியாளர்கள் விமானியின் நடத்தை வழமைக்கு மாறாக இருப்பதை கண்டு அது குறித்து நிர்வாகத்தை அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து பொலிஸார் விமானத்தில் இருந்து அவரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

பலவீனமான நிலையில் விமானத்தில் பொறுப்பாக இருந்ததாக அந்த விமானி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மிரஸ்லோ கிரொன்சி என்ற 37 வயது ஸ்லோவக் நாட்டவரே கைது செய்யப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: