பொலிஸ் சோதனை சாவடி மீது தாக்குதல் – 11 பொலிசார் உயிரிழப்பு!

Wednesday, March 13th, 2019

ஆப்கானிஸ்தானில் பொலிஸ் சோதனை சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பொலிசார் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பட்கிஸ் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு இவர்கள் பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் பொலிசாரை குறிவைத்து தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் குவாலா இ நவ்வில் முகூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே நடந்த தாக்குதலில் 11 பொலிசார் உயிரிழந்துள்ளதுடன், இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் பலரும் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: