பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு: ஒருவர் பலி!

ஜேர்மனியில் பொலிஸ் அதிகாரிகள் மீது போராட்டக்காரர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு பொலிசார் பலியாகியுள்ளதாகவும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பவேரியா மாகாணத்தை சேர்ந்த Reichsbürger என்ற வலதுசாரி இயக்கம் நவீன ஜேர்மனிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.‘இரண்டாம் உலகப்போருக்கு முன்னாள் இருந்தது தான் உண்மையான ஜேர்மனி நாடு என்றும் தற்போதுள்ள நவீன ஜேர்மனியை ஏற்றுக்கொள்ள முடியாது’ என அந்த அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், Georgensgmünd நகரில் இந்த அமைப்பை சேர்ந்த சிலர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.அப்போது, போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.கூட்டத்தை நோக்கி பொலிசார் வருவதை பார்த்த போராட்டக்காரர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் 4 பொலிசார் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளது. நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு பொலிசார் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.பொலிசார் மீது துப்பாக்கி சூடு நடத்திய 49 வயதான நபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related posts:
|
|