பொருளாதாரத்தை மேம்படுத்த சுதந்திர பண வர்த்தகத்தை அறிவித்தது எகிப்து!

தனது பொருளாதாரத்தில் நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதத்தில் வடிமைக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, திறந்தவெளி சந்தையில் தனது பணத்தை தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்று எகிப்து அறிவித்துள்ளது.
இந்த வர்த்தக முறை அமலாவதற்குமுன், உதவி மதிப்பீடாக, மத்திய வங்கியானது வழிகாட்டுதல் விகிதமாக எகிப்தின் பவுண்ட் மதிப்பை 48 சதம் அளவில் குறைத்து மதிப்பீடு செய்து அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது, வெளிநாட்டு பணத்தில் நிலவும் கறுப்பு சந்தையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு முக்கிய விதியை எகிப்து முழுமையாக பூர்த்தி செய்துள்ளது.சுமார் 12 பில்லியன் டாலர் கடன் தொகையை எகிப்திற்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் ஆலோசித்து வருகிறது.இந்த செய்தியை தொடர்ந்து, எகிப்தின் முக்கிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 8 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது
Related posts:
|
|