பொதுத் தேர்தலை மீண்டும் நடத்துங்கள்: பாங்களாதேஷ் எதிர்கட்சிகள் கோரிக்கை !

Monday, December 31st, 2018

பாங்களாதேஷில் இடம்பெற்ற பொது தேர்தலை மீண்டும் நடத்துமாறு எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தேர்தலின் போது, தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தே, எதிர்கட்சிகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

பங்களாதேஷில் பொது தேர்தல் குறித்து வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளுக்கு அமைய முன்றாவது முறையாக பொது தேர்தலில் போட்டியிட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா (Sheikh uasina) முன்னிலையில் உள்ளார்.

வெளியாகியுள்ள தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, 281 தொகுதிகளில் அவரின் கட்சி முன்னிலையில் உள்ளதாக பங்களாதேஷ் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

Related posts: