பேஸ்புக்கிற்கு சோதனையான காலகட்டம் – எச்சரித்துள்ள மார்க் ஸுக்கர்பர்க்!

Saturday, October 31st, 2020

எதிர்வரும் வாரம் பேஸ்புக்கிற்கு சோதனையான காலகட்டமாக இருக்குமென்று நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பர்க் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் நாளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் வன்முறைகள் கூட வெடிக்கலாம் என எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா தற்போது பிளவுபட்டு நிற்பதால் உள்நாட்டு அமைதியின்மை ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் புதிய அச்சுறுத்தல்களை தாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் இடம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனநாயக ஒருமைப்பாட்டையும், மக்களின் உரிமையையும் காக்க போராடுவோம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: