பேஸ்புக்கால் நிராகரிக்கப்பட்ட விசா !

உங்களது நாளாந்த வாழ்க்கையில் சமூக வலைத்தளங்கள் அதிகரித்த தாக்கத்தினை செலுத்துகின்றமை குறிப்படத்தக்கது. இந்நிலையில், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் தரவுகள் தொடர்பில் அவதானமாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு சுற்றுலா விசாவில் ஆஸ்திரேலியா வந்த பங்களாதேஷ் நபர் ஒருவர், தான் கிறிஸ்தவராக மதம் மாறியதால் தனக்கு அங்கு உயிராபத்து இருப்பதாகக்கூறி ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்சக்கோரிக்கை விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் இவரது விண்ணப்பத்தை நிராகரித்த ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள், குறித்த நபர் ஒரு முஸ்லிம் என அவரது பேஸ்புக் தகவல் கூறுவதாக சுட்டிக்காட்டியிருந்தனர். குடிவரவுத் திணைக்களத்தின் இத்தீர்மானத்தை Administrative Appeals Tribunalஉம் உறுதி செய்திருந்த நிலையில் இவ்விவகாரம் Federal Circuit Courtக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
பேஸ்புக் தகவலை அடிப்படையாக வைத்து ஒருவரின் அகதி தஞ்சக்கோரிக்கையை நிராகரிப்பதென்பது சட்டத்தை மீறும் செயல் என குறித்த நபர் சார்பில் வாதிடும் வழக்கறிஞர் சித்திக் SBS இடம் தெரிவித்தார்.
இந்தப்பின்னணியில் அகதி தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்கள் மட்டுமல்லாமல் Partner விசா உள்ளிட்ட பல விசா விண்ணப்பங்களில், சமூகவலைத்தளத்தில் பகிரப்படும் தகவல்கள் தாக்கம் செலுத்துவதாகவும் இது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
|
|