பேருந்தொன்று ஆற்றில் வீழ்ந்து  விபத்து: நேபாளத்தில் 31 பேர் பலி!

Sunday, October 29th, 2017

நேபாளம் திரிசூல் பகுதியில் பயணிகள் பேருந்தொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

பண்டிகை கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊர் திரும்பிக்கொண்டிருந்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது இந்த விபத்தின் போது பேருந்தினுள் இருந்து ஏற்கனவே 26 பேர் உடலாமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 16 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் குறித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக மீட்புப் படையினரை மேற்கோள் காட்டி நேபாள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன

விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில், மேலும் 13 பேர்வரையில் பேருந்தில் அகப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related posts: