பேருந்து விபத்து – மலேசியாவில் 11 பேர் உயிரிழப்பு!

Tuesday, April 9th, 2019

மலேசியாவில் மழைநீர்க் கால்வாய் மீது பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் சரக்கு விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், பேருந்து சாரதி உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

குறித்த இந்த விபத்து தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: