பேருந்து விபத்து : நேபாளத்தில் 25 பேர் உயிரிழப்பு!

Tuesday, August 16th, 2016

நேபாளத்தில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.

நேபாள தலைநகர் காத்மண்டு அருகே, அதிக பயணிகளுடன் சென்ற நெரிசல் மிகுந்த பேருந்து சாலையை விட்டு திசை மாறி, அங்கிருந்த ஒரு ஆற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  விபத்தில் காயமடைந்தவர்களை வான்வழியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல, சம்பவ இடத்துக்கு ஒரு உலங்குவானூர்தி அனுப்பப்பட்டுள்ளது.

மலைப் பகுதியில் உள்ள சாலைகளில் நிலவும் மோசமான நிலை அல்லது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதாலும், நேபாளத்தில், ஒவ்வொரு வருடமும், நூற்றுக்கணக்கான மக்கள் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர் என்பத குறிப்பிடத்தக்கது.

Related posts: