பேருந்து – ரயில் விபத்து 13 மாணவர்கள் பலி!

பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பேருந்து இன்று(26) காலை புகையிரதத்துடன் மோதியதில் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விஷ்ணுபுரா காவல் சரகத்திற்கு உட்பட்ட துதி பகுதியில் ஆளில்லா லெவல்கிராசிங்கை கடக்க முயன்ற போது வேகமாக வந்த ரயில் மோதியதிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே குறித்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், இந்தவிபத்து துரதிஷ்டவசமானது என்றும், காயம் அடைந்த மாணவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யும் என்றும் தெரிவித்த முதலமைச்சர் விபத்து குறித்துவிசாரணை நடத்த உயர்மட்ட குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
|
|