பேருந்து தீப்பிடித்து 52 பேர் உயிரிழப்பு!

Saturday, January 20th, 2018

வட மேற்கு கஜகஸ்தானில் பேருந்து ஒன்று தீ பிடித்ததில் அதில் பயணித்த 52 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கஜகஸ்தான் உள்துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது.

இந்த விபத்து கஜகஸ்தான் அக்டோப் பகுதியில் உள்ள இர்கிஸ் மாவட்டத்தில்  நடைபெற்றது.

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 5 பேர் மட்டும் உயிர் தப்பியுள்ளனர். அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை வழங்கப்பட்டது.

ரஷ்யாவிற்கு உஸ்பக் குடிமக்களை  ஏற்றி சென்ற பேருந்தாக அது இருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts: