பேருந்து கோர விபத்து : 28 ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

Thursday, April 18th, 2019

போர்த்துக்கல் மடெய்ரா (Madeira) என்ற தீவில், ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடியிருப்புக்கள் உள்ள தாழ்ந்த பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பேருந்தில் 55 பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் 17 பெண்கள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 28 பேர் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: