பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 8 மாணவர்கள் உட்பட 10 பேர் பலி!

குஜராத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாணவர்கள் உட்பட 80 பேர் சுற்றுலாவிற்காக சென்ற பேருந்து மகால்-பரிதாபாத் சாலையில் அகவா நகரில் சென்றபோது, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 8 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் படுகாயம் அடைந்த 24 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பாரிஸில் நடைபெறவிருந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு!
கியூப தேசத்தின் தலைவர் காஸ்ட்ரோவுக்கு சிலை வைக்க கியூபாவில் தடை!
மீனவர் பிரச்சினைக்கு நிலையான தீர்வு - சுஷ்மா ஸ்வராஜ்!
|
|