பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 8 பேர் உயிரிழப்பு!

ஈரான் நாட்டு தலைநகர் அருகேயுள்ள நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் நாட்டு தலைநகரான டெஹ்ரான் – கோம் நெடுஞ்சாலை வழியாக சுமார் 50 பயணிகளுடன் வந்த பேருந்து, கெர்மான் நகரின் மத்திய பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
மெக்சிக்கோவில் 132 அரசியல்வாதிகள் கொலை!
சோபா ஒப்பந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தம் !
புலம் பெயர்ந்த தமிழர்களை ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள அழைப்பு!
|
|