பேருந்தும் லொரியும் மோதி கோர விபத்து – 19 பேர் உயிரிழப்பு!

Saturday, February 23rd, 2019

தான்சானியாவில் சிறிய பேருந்தும் லொரியும் மோதிய விபத்தில் பெண்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டுண்டுமா பகுதி அருகே சிறிய பேருந்து சென்றபோது எதிரே வந்த லொரியுடன் வேகமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திலேயே பெண்கள் உட்பட17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.