பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தயார் -மெர்க்கல்
Sunday, June 11th, 2017பிரித்தானிய பொதுத் தேர்தலில் தெரேசா மே பெரும்பான்மை பலத்தை பெற தவறிய போதிலும், திட்டமிட்டபடி பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயார் என ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
தெரேசா மேயின் கொன்சவேற்றிவ் கட்சி பெரும்பான்மையை இழந்ததை தொடர்ந்து அவர் பதிவுசெய்த முதல் கருத்து இதுவாகும்.
அதேவேளை, எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளின் பின்னர் பிரித்தானியா சிறந்த பங்காளியாக திகழும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரெக்சிற் குறித்த அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு வலிமை வாய்ந்த, நிலையான தலைமை அவசியம் என்பதை வலியுறுத்தி பிரதமர் தெரேசா மே முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.
அதன்படி நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தலில் கொன்சவேற்றிவ் கட்சி எட்டு ஆசனங்களினால் பெரும்பான்மையை இழந்தது. இதனால் பிரெக்சிற் பேச்சுவார்த்தை இடம்பெறுவது தொடர்பில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது.
இந்நிலையில், வட அயர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியான ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைத்து பிரெக்சிற் பேச்ச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரேசா மே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|