பெல்ஜியம் தாக்குதலுக்கு அஞ்சலி!

பிரஸ்சல்ஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உலகின் பல்வேறு கட்டிடங்களும் பெல்ஜியம் நாட்டின் கொடியின் வண்ணத்தில் தோன்றியது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் உள்ள உள்ள Zaventem விமான நிலையம், Maalbeek மற்றும் Schuman ஆகிய இரு ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து 3 வெடிகுண்டுகள் வெடித்தது. இதில் 32 பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் நிகழ்த்திய இந்த தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மற்றும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 தீவிரவாதிகளில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதலில் இறந்தவர்களுக்கு பலரும் தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். மேலும் உலகளவில் புகழ்பெற்ற பல்வேறு கட்டிடங்களும் பெல்ஜியம் நாட்டின் கொடியின் வண்ணத்தில் தோன்றின.
பாரிஸின் ஈபில் டவர், ரோமில் உள்ள த்ரிவி ஃபவுண்டேன், பெர்லினில் உள்ள ப்ராண்டென்பெர்க் கேட், உலகின் உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிபா, நெதர்லாந்தின் டாம் ஸ்கொயரில் உள்ள அரண்மனை உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களும் பெல்ஜியம் கொடியின் வண்ணமான மஞ்சள் , சிவப்பு, மற்றும் கறுப்பு வண்ணத்தில் தோன்றின.
மேலும் பெல்ஜியத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Related posts:
|
|