பெல்ஜியம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் படங்கள் வெளியானது!
Wednesday, March 23rd, 2016பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
குறித்த விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.விமான நிலைய கமராவில் பதிவாகியுள்ள படத்தில் 3 இளைஞர்கள் கை தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைவது பதிவாகியுள்ளது.
படத்தில் வலது பக்கத்தில் இருப்பவர் தப்பி ஓடிவிட்டதாகவும் அவரை தேடும் பணி தற்போது நடைபெற்று வருவதாகம் செய்திகள் கூறுகின்றன. வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தை நாங்கள்தான் நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜப்பானுக்கு கிடைத்தது மருத்துவம், உடலியலுக்கான நோபல் பரிசு !
மாலைதீவு அரசாங்கத்திற்கும் பிரித்தானியாவுக்கும் ராஜதந்திர ரீதியில் முறுகல் நிலை!
கடலுக்கு அடியில் பாரிய எரிமலை வெடிப்பு: டொங்கா - நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச...
|
|