பெல்ஜியத்தில் பொலிஸார் மீது கத்திக்குத்து!

பெல்ஜிய நகரான சார்லெரோய் பகுதியில், பெண் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதலாளி சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த இச்சம்பவம், பயங்கரவாத நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்டதாகச் சந்தேகிப்பதாக, பெல்ஜியப் பிரதமர் சார்ள்ஸ் மைக்கல் தெரிவித்துள்ளார்..
பொலிஸ் பாதுகாப்புச் சாவடியொன்றில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொலிஸாரால் கோரப்பட்டபோது, குறித்த நபர், நீண்ட கத்தியை எடுத்துத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக அவர், “அல்லாஹூ அக்பர்” என உரத்துச் சத்தமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார், அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த நபரின் அடையாளங்கள் குறித்த தகவல்கள், இதுவரை வெளியிடப்பட்டிருக்கவில்லை.
பெல்ஜியத்திலும் ஐரோப்பாவிலும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட சோதனைச் சாவடியிலேயே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும், ஆபத்துக் கட்டத்தில் இல்லை என அறிவிக்கப்படுகிறது.
Related posts:
|
|