பெல்ஜியத்தில் பூனையையும் தாக்கிய கொரோனா!

Tuesday, March 31st, 2020

பெல்ஜியம் நாட்டில் பெண் பூனை ஒன்றிற்கு கொவிட் 19 என அழைக்கப்படும் என கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் அவர் வளர்த்த செல்லப்பிராணிக்கும் கொரோனா பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த பூனை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பெண் பூனைக்கும் கொரோனா வைரஸ் தொற்றானது பரவியிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை ஹொங்கொங் நாட்டில் இரு நாய்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸானது தற்பொழுது மிருகங்களுக்கும் பரவி வருகின்ற நிலைல், பிரித்தானியாவில் கொரோனா தொற்றினை கண்டறிய காவல் துறையினரால் மோப்ப நாய்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று மிருகங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுகின்றமையினால் இலங்கை மக்கள் செல்லப்பிராணிகளை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: