பெல்ஜியத்தின் அணு உலைகளை தாக்க திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள்!
Friday, March 25th, 2016பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகர விமான நிலையத்தை தாக்குவதற்கு பதிலாக அங்குள்ள அணு உலைகளை தகர்த்து பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகரில் விமான நிலையம், சுரங்க ரெயில் நிலையம் ஆகியவற்றில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் 2 பேர் சகோதரர்கள். ஒருவர் பெயர் காலித் மற்றொருவர் பெயர் இப்ராகிம் பக்ரயி.இருவரில் இப்ராகிம் விமான நிலையத்திலும், காலித் சுரங்க ரெயில் நிலையத்திலும் மனித வெடிகுண்டுகளாக மாறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பெல்ஜியத்தில் உள்ள அணு உலைகளை தகர்த்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த தான் காலித் மற்றும் இப்ராகிம் பக்ரயி இரு தீவிரவாதிகளு பிரசல்ஸ் நகரில் நுழைந்துள்ளனர்.
விமான நிலையத்தில் தாக்குதலை நடத்தி விட்டு, அதே சமயத்தில் அணு உலைகளையும் தகர்க்க திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், இரட்டை சகோதரர்களின் கூட்டாளி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதால், அணு உலைகளை தாக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டு ரயில் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அணு உலைகளை தாக்குவதற்கு சரியான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொள்ள பெல்ஜியம் அணு உலைகள் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வீட்டிற்கு முன்பாக தீவிரவாதிகள் ரகசிய கேமிராவை பொருத்தி உள்ளனர். இதன் மூலம், இயக்குனரின் நடவடிக்கைகளை தீவிரவாதிகள் கூர்ந்து கண்காணித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீவிரவாதிகளின் கூட்டாளி கைது செய்யப்படாமல் அவர்கள் அணு உலைகளை தகர்த்திருந்தால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்ட நாட்டையே உலுக்கியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், துரிதமாக செயல்பட்ட போலீசார் கூட்டாளியை கைது செய்ததால், பெரும் ஆபத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
|
|