பெர்லின் தேர்தல் தோல்விக்கு ஏங்ககெலா மெர்கல் பொறுப்பேற்றார்!

Tuesday, September 20th, 2016

பெர்லின் மாநில தேர்தலில் தனது கிறித்துவ ஜனநாயகக் கட்சியின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தோல்விக்கு ஜெர்மன் சான்செலர் ஏங்கெலா மெர்கல் பொறுப்பேற்றுள்ளார்

இது ஒரு கசப்பான முடிவு என்று கூறிய அவர், அகதிகள் அனைவரும் நாட்டுக்குள் வரலாம் என்ற தனது திறந்த கொள்கைதான் இதற்கு காரணம் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.காலத்தை திருப்ப முயன்றால், கடந்த வருடம் ஜெர்மனியில் அதிக எண்ணிக்கையில் நடந்த குடியேறிகளின் வருகை தொடர்பாக தன்னை நன்றாக தயார்படுத்தியிருப்பேன் என்றும் தனது குடியேறிகள் குறித்த கொள்கையை விளக்க கடினமாக உழைக்க வேண்டும் என்றும் ஏங்கெலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

குடியேறிகளுக்கு எதிரான வலது சாரி கட்சி, பெர்லின் தேர்தலில் 14 சதவீத வாக்குகளைப் பெற்று முதல்முறையாக மாநில நாடாளுமன்றத்திற்கு செல்லவிருக்கிறது.

_91301418_160916121321_angela_merkel_624x351_afp

Related posts: