பெரும் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரங்கள் கொள்ளை!

625.0.560.350.160.300.053.800.668.160.90 (3) Thursday, April 20th, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கடை ஒன்றில் நுழைந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள கடிகாரங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுவிஸில் உள்ள சூரிச் நகரில் விலையுயர்ந்த கடிகாரங்களை விற்பனை செய்யும் வணிக வளாகம் ஒன்று இயங்கி வருகிறது.இந்த வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் நேற்று இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் நுழைந்துள்ளனர்.

பின்னர், கடைக்குள் இருந்த பாதுகாப்பு கண்ணாடிகளை உடைத்த அவர்கள் எண்ணற்ற கடிகாரங்களை அள்ளிச்சென்றுள்ளனர்.

கொள்ளைப்போனவற்றில் ரோலக்ஸ், ஒமேகா உள்ளிட்ட விலையுயர்ந்த கடிகாரங்கள் எனவும், இவற்றின் மதிப்பு 3,00,000 சுவிஸ் பிராங்க் எனவும் உரிமையாளர்கள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்ற பொலிசார் கடையில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராக்களில் மர்ம நபர்களின் உருவங்கள் பதிந்துள்ளன. மேலும், கொள்ளையடித்த பின்னர் அவர்கள் ஏதாவது ஒரு வாகனத்தில் தப்பியிருக்க வாய்ப்புள்ளதாக பொலிசார் சந்தேகித்துள்ளனர்.

சூரிச் நகரில் விலையுயர்ந்த கடிகாரங்களை கொள்ளையிட்ட நபர்கள் பற்றி தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல் துறையை அனுகுமாறு பொலிசார் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


5 தமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி: பிரித்தானிய கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!
இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலால் கரைதிரும்பிய 3000 இந்திய மீனவர்கள்!
சூறாவளி: தெற்கு அமெரிக்காவில் 18 பேர் பலி!
ட்ரம்பின் தடை உத்தரவுக்கு ஆப்பு ! அமெரிக்காவுக்கு ஆபத்தாம்!!
சிரிய குண்டுத்தாக்குதலில் 42 பேர் உயிரிழப்பு!