பெருநகர புகையிரத கட்டுமானத்திற்கு நீதிமன்றம் தடை!

Saturday, August 20th, 2016

பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் ஒன்று நாட்டின் முதல் பெரு நகர புகையிரத போக்குவரத்து அமைப்பின் கட்டுமானத்தை நிறுத்தக்கோரி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மெட்ரோவின் திட்டமிட்ட பாதையை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர். லாகூர் உயர்நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த திட்டத்தால் லாகூரில் உள்ள முகலாய கோட்டை, ஷாலிமார் தோட்டம் மற்றும் 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தேவாலாயம் உட்பட பதினோரு வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஆபத்திற்கு உள்ளாகும் என்று அவர்கள் வாதிட்டனர். சீனாவின் நிதியுதவியோடு கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இந்த கட்டுமான பணி, இந்த வரலாற்று சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்து 61 மீட்டருக்குள் வரக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts: