பெண்கள் கடத்தலுக்கு ஐ.நா சபை கண்டனம்!

Wednesday, February 7th, 2018

நேபாளத்தில் இருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு பெண்கள் கடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராகநேபாள அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே நேபாளத்தில் இருந்த பல பெண்கள் வேறு நாடுகளுக்கு தொழில்பெற்றுத் தருவதாக ஏமாற்றப்பட்டு இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குகடத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் கைது செய்யப்பட்டும் இருந்தனர்.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐ.நாவின் குடியேறிகளுக்கான மனிதஉரிமைகள்துறை விசேட அறிக்கையாளர் பெலிமப் கொன்சலேஸ் மொராலெஸ் தெரிவித்துள்ளார்

Related posts: