பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

Saturday, November 17th, 2018

சூரியனுக்கு அருகே பூமியை போன்ற புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கலிபோனியா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆராய்ச்சி நிலையமும், ஸ்பெயின் விண்வெளி அறிவியல் மையமும் இணைந்து ‘பர்னாட்ஸ்’ என்ற நட்சத்திரம் குறித்து ஆய்வினை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அந்த நட்சத்திரத்திற்கு அருகே பூமியை போன்ற கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகம் பூமியை விட 3.2 மடங்கு நிறையை கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

160 டிகிரி செல்ஷயஸ் வெப்ப நிலை நிலவுவதனால், அங்கு கடுமையான குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர திரவ நிலையில் நீர் இல்லாதமை காரணமாக மனிதரோ அல்லது எந்த வகையான உயிரினங்களோ அங்கு வாழ முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: