பூட்டானின் பிரதமரானார் லோட்டே ஷெரிங்!

Friday, November 9th, 2018

பூட்டான் நாட்டின் புதிய பிரதமராக லோட்டே ஷெரிங் பதவியேற்றுள்ளார்.

பூட்டானில் முதல் சுற்று பாராளுமன்ற தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அந்நாட்டு அரசியல் சட்டப்படி முதல் சுற்று தேர்தலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் கட்சிகளுக்கு இடையே 2ஆவது சுற்று போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும்.

அதன்படி கடந்த ஒக்டோபர் 18 ஆம் திகதி 2ஆவது சுற்று தேர்தல் நடைபெற்றது. இதில் டி.என்.டி. மற்றும் டி.பி.டி. கட்சிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மொத்தம் உள்ள 47 தொகுதிகளில் 30 தொகுதிகளை டிஎன்டி கட்சி கைப்பற்றியது. இதையடுத்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் லோட்டே ஷெரிங் பிரதமராக பதவியேற்றார்.

அவருக்கு பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நாம்கியேல் வாங்சக் பாரம்பரிய முறைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய பிரதமர் லோட்டே ஷெரிங் தலைமையிலான 10 மந்திரிகள் கொண்ட மந்திரிசபையும் பதவியேற்றது. எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர்.

Related posts: