புலிட்சர் விருதுகள் அறிவிப்பு!

Wednesday, April 20th, 2016

புகைப்படத்துடனான அவசர செய்தி, புலனாய்வு செய்தி, பொதுசேவை செய்தி வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் திறம்பட செயலாற்றிய நிறுவனங்களுக்கு புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நியூயோர்க் நகரில் இதனை அறிவித்துள்ள புலிட்சர் விருதுக்குழுத் தலைவர் மைக் பிரைட், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையும் அகதிகளின் அவல நிலையை மக்களுக்கு எடுத்துக்காட்டிய நியூயோர்க் டைம்ஸ் மற்றும் தாம்ஸன் ராய்ட்டர் ஆகிய நிறுவனங்கள் விருதுகளை வென்றுள்ளதாக அறிவித்தார்.

தஞ்சம் கோரிய சிறுவனை சிலர் சித்திரவதை செய்ததை அப்பட்டமாக வெளிப்படுத்தியதற்காக விருது வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுச்சேவை செய்திப் பிரிவிற்காக அசோஸியேட்டட் பிரஸ் நிறுவனம் விருது பெறுவதாக மைக் பிரைட் தெரிவித்தார். கடல் உணவு விநியோக நிறுவனத் தொழிலாளர்களின் அவல நிலையை எடுத்துக்காட்டியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

Related posts: