புராதன நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூர்!

Sunday, July 7th, 2019

உலகின் புராதன நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரும் இணைக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது.

அதில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் புராதன சிறப்பு மிக்க நகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் யுனெஸ்கோ அமைப்பின் புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் தெரிவு செய்யப்பட்டமைக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜெய்ப்பூர் கலாசாரம் மற்றும் வீரம் கலந்த நகரம். ஜெய்ப்பூரின் விருந்தோம்பல் எல்லா இடங்களிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது. இந்த நகரம் புராதன நகரங்கள் பட்டியலில் தெரிவானது மகிழ்ச்சி என அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை கடந்த ஆண்டு யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற பெருமையை ஆமதாபாத் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: