புயலில் சிக்கி குழந்தைகள் உள்ளிட்ட 49 சுற்றுலா பயணிகள் மாயம்!

Monday, June 20th, 2016

ரஷ்யா நாட்டில் உள்ள ஏரியில் சுற்றுலா சென்ற 49 பயணிகள் புயலில் சிக்கி காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமேற்கு ரஷ்யாவில் உள்ள Karelia என்ற பகுதியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி சென்றுள்ளனர். அப்போது, திடீரென புயல் வீசியதாக கூறப்படுகிறது.

Syamozero என்ற ஏரியில் உருவான திடீர் புயலில் 49 பேர் சிக்கி காணாமல் போயுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவலில், 3 படகுகள் புயலில் சிக்கி விபத்துக்குள்ளானதில் மோஸ்கோ நகரை சேர்ந்த 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், எஞ்சிய காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: