புயலால் மெக்ஸிகோவில் 38 பேர் பலி!

சனிக்கிழமை அன்று மெக்ஸிக்கோ நாட்டின் கிழக்கு பகுதியை தாக்கிய ‘ஏல்’ என்ற வெப்பமண்டல புயலால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளாலும், வெள்ளப்பெருக்காலும் 38 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
புயெப்லா மாநிலத்தின் தொலைதூரக் கிராமத்திலும், அதற்கு அடுத்திருக்கும் வெராகுருஸிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு மக்களின் வீடுகள் புதையுண்டதால் தான் அதிகமானோர் இறந்துள்ளனர். கரீபியன் பகுதியில் அழிவுகளை ஏற்படுத்திய பின்னர் முதல் வகை சூறாவளியான ஏல் பெலிஸியில் கரை கடந்தது.
அது வடக்கிற்கு நகர்ந்தபோது பலவீனமடைந்தாலும், பெய்த கனமழையாலும், பலத்தக் காற்றாலும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து கிழக்கு மற்றும் மத்திய மெக்ஸிகோவில் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
Related posts:
ஆசிரியர்களுடன் கைகுலுக்க மறுத்தால் பெற்றோர் தண்டப் பணம் செலுத்த வேண்டும்!
மொசூல் யுத்தம்: மக்களுக்காக அவசர முகாம்களை அமைக்கும் பணியில் ஐ.நா தீவிரம்!
அமெரிக்காவிலும் புகுந்த சாதி - நிறைவேறியது புதிய சட்டம்!
|
|