புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறது பிரேசில்-மிஷல் டெம்மர்!

Thursday, September 1st, 2016

பிரேசிலின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்ட மிஷல் டெம்மர், தற்போது பிரேசில் ஒரு புதிய நம்பிக்கை சகாப்தத்தில் பிரவேசித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய மிஷல் டெம்மர் நாட்டில் ஒற்றுமை ஏற்பட அறைகூவல் விடுத்தார். தில்மா ருசெஃப் மீதான குற்ற விசாரணையும், பின்னர் நடந்த நீக்கமும் பிரேசிலில் பல மாதங்களாக நிலவிய நிலையில்லாத்தன்மையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக மிஷல் டெம்மர் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், வரவு செலவு திட்டத்தில் மோசடி செய்து, நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை மறைத்ததாக தில்மா ருசெஃப் மீது குற்றச்சாட்டு எழுந்தது.தில்மா ருசெஃப் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விசாரணையின் முடிவில், நடந்த வாக்கெடுப்பில், அவரது நீக்கத்துக்கு ஆதரவாக 81 உறுப்பினர்களில், 61 பேர் வாக்களித்தனர்.

Related posts: