புதிய கூட்டணி அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒஸ்ரியாவில் அமைக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம்!

Monday, January 15th, 2018

ஒஸ்ரியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூட்டணி அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

புதிய கூட்டணி அரசாங்கத்தில் தீவிர வலதுசாரி சுதந்திரக் கட்சியைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஒஸ்ரியாவின் தலைநகரான வியன்னாவில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஒஸ்ரியாவில் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில், எந்தக் கட்சியும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால், புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், கொன்சர்வேட்டிவ் மக்கள் கட்சியுடன் சுதந்திரக் கட்சி கூட்டணி அமைத்துக்கொண்டது. இதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: