புகையிரதத்துடன் ட்ரக் ரக மோதி விபத்து – 4 பேர் பலி!

Friday, January 5th, 2018

தென்னாபிரிக்காவில் தொடருந்து ஒன்று ட்ரக் ரக வாகனமொன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் , 40க்கும் அதிகமானவர்கள் குறித்த விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தின் பின்னர் தொடருந்தின் ஒரு பெட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.தொடருந்து கடவையொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் , ட்ரக் ரக வாகனத்தின் சாரதி தொடருந்து வரும் போது தொடருந்து கடவையில் வாகனத்தை செலுத்தியுள்ளதால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை , தொடருந்தில் பயணித்த சுமார் 850 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான ட்ரக் ரக வாகனத்தின் சாரதியும் குறித்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்துள்ளார். இந்த விபத்தில் தொடருந்தின் முதல் இரண்டு பெட்டிகளில் பயணித்த பயணிகள் சிலரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: