புகையிரதத்தில் தீ விபத்து – 20 பேர் பலி!

Thursday, February 28th, 2019

எகிப்து தலைநகர் கெய்ரோ புகையிரத நிலையத்தில் புகையிரத விபத்தின் போது தீப்பற்றியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

புகையிரதத்தில் தீ விபத்து பற்றி அறிந்ததும், தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related posts: