புகைப்பிடிப்பதால் அதிகமாக உயிரிழக்கும் முதல் 4 நாடுகளின் பட்டியலில் இந்தியா!

Saturday, April 8th, 2017

உலகிலேயே புகைப்பிடித்தலால் அதிகமானவர்கள் உயிரிழக்கும் நாடுகளில் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருப்பதாக உலக நோய் பாதிப்புக்கள் குறித்து தி லான்செட் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் மாத்திரம் 2015 ஆம் ஆண்டு புகைப்பிடித்தலால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக 63 தசம் 6 சதவீதமானோர் உயிரிழந்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் 195 நாடுகளில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில், இறப்பு மற்றும் மந்தத்தன்மைக்கு புகைப்பிடித்தல் முக்கிய காரணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல நாடுகளில் புகையிலை கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது.உலகில் உள்ள 4 இல் ஒருவர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாகவும் இவர்களில் 3 இல் ஒருவர் உயிரிழப்பதாகவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தினமும் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: