பீபா ஒழுங்காற்றுக்குழுவின் தலைமை விசாரணையாளர் பணிநீக்கம்!

Friday, May 12th, 2017

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளமான பீபாவின் உயர் அதிகாரிகளும் சம்மந்தப்பட்ட நூற்றுக் கணக்கான ஊழல் மோடிசகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பீபாவின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைமை விசாரணையாளரும், நீதிபதியும் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

தலைமை விசாரணையாளராக கடமையாற்றிய கேர்ணல் பொப்லி மற்றும் ஒழுக்காற்று விசாரணைக்கான நீதிபதி ஹான்ஸ் ஹான்ஸ் ஜோக்கிம் ஏர்கட் ஆகியோரை எந்தவொரு காரணத்திற்காகவும் மீளவும் குறித்த பதவிகளில் அமர்த்தப்போவதில்லை என்றும் பீபா அறிவித்துள்ளது.

பீபாவில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பிலான விசாரணைக்கு இந்த அதிகாரிகளின் பணி நீக்கம் பெரும் தடையாக இருக்கும் என்று இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் பீபாவின் தலைமை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

ஊழல் மோசடிகள் காரணமாக கால்பந்தாட்ட இரசிகர்கள் மத்தியில் பீபா குறித்து கடுமையான எதிர்ப்புக்கள் வலுப்பெற்றுள்ளதால் பீபா கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் குறித்து பணி நீக்கம் செய்யப்பட்ட இரு அதிகாரிகளும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானவர்களே தம்மை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக போப்லி குற்றம்சாட்டியுள்ளார்.அதேவேளை தமது பணிநீக்கம் முழுமையாக அரசியல் காரணத்திற்காகவே இடம்பெற்றுள்ளதாகவும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தலைமை விசாரணையாளர் பொப்லி தெரிவித்துள்ளார்.

பீபாவின் நலன்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையை விட தனிப்பட்ட தேவைகபை் பூர்த்திசெய்துகொள்வதற்காகவே தாங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜேர்மன் நாட்டு நீதிபதியான ஏர்கட் குற்றம்சாட்டியுள்ளார்.சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளமான பீபா தற்போது பலவீனமடைந்துள்ளதுடன் அதன் ஆற்றலையும் இழந்துவிட்டதாகவும் பீபாவிலிருந்து வெளியேற்றப்பட்ட உயர்நிலை அதிகாரிகள் இருவரும் தெரவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட ஊழல் மோசடிக்  குற்றச்சாட்டுக்களை அடுத்து பீபாவின் பல உயர் அதிகாரிகள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்ட நிலையில் பீபாவை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கேர்ணல் பொப்லியும் நீதிபதி ஏர்கட்டும் இணைந்து பீபாவின் பல முக்கிய புள்ளிகளை பீபாவிலிருந்து நீக்கியிருந்தனர். அதேவேளை கடந்த அண்டு விசாரணை நடத்தி பீபாவின் தற்போதையத் தலைவர் கிஹானி இன்பென்டினோ மீது சுமத்தப்பட்டிருந்த மோசடிக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் தெரிவித்து அவரை பாதுகாத்திருந்தனர்.

Related posts: