பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் ரொட்ரிக்கோ துதார்த்தி வெற்றி

Wednesday, May 11th, 2016

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகிக் கொண்டுள்ள நிலையில்  ரொட்ரிக்கோ துதார்த்தி  வெற்றிபெற்றுள்ளார்.

உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் பிரதான போட்டி வேட்பாளர் மா ரொக்ஸிஸ் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த வெற்றியை மிகவும் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக துதார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசார காலத்தில் 71 வயதான துதார்த்தி வெளியிட்ட கடுமையான கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. எனினும் சட்டம் மற்றும் ஒழுங்கு நடைமுறைகளில் அவர் பின்பற்றிய கடுமையான நிலைப்பாடுகள் துதார்த்தியின் வெற்றிக்கு வித்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டவோவ் நகர மேயராக செயற்பட்ட காலத்தில் குற்றங்களை குறைப்பதற்கு அவர் அதிக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இதுவே வாக்காளர்களை அதிகளவில் ஈர்த்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: