பிலிப்பைன்ஸில் 13 இராணுவ வீரர்கள் பலி!

Monday, June 12th, 2017

பிலிப்பைன்ஸில் தீவிரவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்களில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிலிப்பைன்ஸின் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அபு சய்யாப் தீவிரவாத குழுவினர் இயங்கி வருகின்றனர்அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களை கடத்தி கொலை செய்து வருகின்றனர்

தீவிரவாதிகள் தற்போது அதிக மக்கள் தொகையை கொண்ட மாராவி நகரை சுற்றி வளைத்துள்ளனர்இதனை மீட்க இராணுவத்தினர் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்இந்நிலையில், கடந்த இரு நாட்களாக ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் யுத்தத்தினால் 13 இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Related posts: