பிலிப்பைன்ஸில் மோதல்: அரச படையினரால் மக்கள் வெளியேற்றம்

Thursday, June 1st, 2017

 

பிலிப்பைன்ஸின் தெற்கு நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், பிலிப்பைன்ஸ் படையினருக்கும் இடையிலான மோதல் நீடித்து வருகின்ற நிலையில், குறித்த பகுதியிலிருந்து 30இற்கும் அதிகமானோர் அரச படையினரால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தொடர்ந்தும் சுமார் 2 ஆயிரம் பேர்வரை மோதல் பிரதேசங்களில் சிக்கி தவித்து வருவதாக மாகாண நெருக்கடி முகாமைத்துவ குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டார்.பிலிப்பைன்ஸின் மராவி நகரில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து வரும் மோதலில் இதுவரை 21 படை வீரர்களும், 19 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த மோதல்களின் எதிரொலியாக மிண்டனோவ் தீவில் ஜனாதிபதி ரொட்ரிகோ டூடெர்ட்டேவினால் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது

Related posts: